திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்.4ம் தேதி முதல் அன்ன பிரசாதத்தில் மசால் வடை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அன்ன பிரசாதத்தில் சாதம், சாம்பார், ரசம், பொரியல், சட்னி, சர்க்கரை பொங்கல் பரிமாறப்பட்டு வரும் நிலையில், சோதனை முயற்சியாக திங்களன்று 5,000 பக்தர்களுக்கு பூண்டு, வெங்காயம் இல்லாத மசால் வடை வழங்கப்பட்டது. இதற்கு வரவேற்பு இருந்ததால் அன்ன பிரசாதத்தில் வடையும் சேர்க்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்