ஒடிசாவில் அரசு அதிகாரியை தாக்கியதற்காக 5 பேரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்த பாஜக


புவனேஸ்வர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் ரத்னாகர் சாஹூ மீதான தாக்குதலை தொடர்ந்து 5 பேரை ஒடிசா பாஜக, கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. அதன்படி மாநகராட்சி உறுப்பினர்கள் அபரூப் நாராயண் ராவுத், ரஷ்மி ரஞ்சன் மொஹபத்ரா, தேபாஷிஷ் பிரதான், சச்சிகாந்த் ஸ்வைன் மற்றும் சஞ்சீவ் மிஸ்ரா ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பாஜக தலைவரிடம் தவறாக நடந்து கொண்டதாக சாஹூ இழுத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்