மணிவண்ணன் இயக்கத்தில் சத்தியராஜ் நடித்த சினிமா கேரக்டர் நிஜமாக வாழ்ந்த ஒரு முதல் அமைச்சரின் கேரக்டர்❗
யார் அவர்❓ என்று கேட்டு இருந்தேன்...
அதற்கு பலர் பல விதமான முதல் அமைச்சர் பெயரை சொல்லி இருந்தனர்.
சிலர் திமுக என்று சொல்லி இருந்தனர்.
அதுவும் 100% உண்மைதான்.
ஆனால் அதற்கு முன் அவர்களுக்கு எல்லாம் ஆசானாக ஒருவர் இருந்தார்.
அவர் என்ன செய்தார் என்பதை பார்த்து விட்டு அதே ரயில் பயணத்தில் அதே மாடலில் திமுக என்ன செய்தது என்பதையும் இந்த தொகுப்பில் காணலாம்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா, ஏழாயிரம் பண்ணை என்ற ஊருக்கு தெற்கே அரை கி.மீ.தூரத்தில் மடத்துப்பட்டி என்ற குக்கிராமம் உள்ளது .
இவ்வூர் தற்போது வெம்பக்கோட்டை தாலுகாவில் சேர்க்கப்பட்ட கிராமம்..
மானாகோனா எனும் மடத்துப்பட்டி கோபால் நாயுடு அவர்கள்
1895 ஆம் ஆண்டு இங்கு பிறந்தவர். மிகப்பெரிய பண்ணையார்.
திருநெல்வேலி,தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி போன்ற நான்கு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உண்டு.
மானாகோனா எனும் மடத்துப்பட்டி கோபால் நாயுடு அவர்கள்
1915 ஆண்டில் காங்கிரஸில் சேர்ந்தார்.
1923 ஆண்டில் முதல் ஜில்லா போர்டு உறுப்பினர் ஆனார்.
அன்று காங்கிரஸ் கட்சியில் தீவிரமான
என் அப்பா சுதந்திர போராட்ட தியாகி S.T.ஆதித்தன் அவர்களை விட 9 வருட சீனியர் மானாகோனா அவர்கள்.
அன்றைய திருநெல்வேலி மாவட்டம் இன்றைய தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், குருவிகுளம்
கோபால்நாயுடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு
1939-40 ஆம் கல்வி ஆண்டில்
அப்போது திருநெல்வேலி ஜில்லாபோர்டு தலைவராக இருந்த மானாகோனா எனும் மடத்துப்பட்டி கோபால் சாமி நாயக்கர் அவர்கள், குருவி குளத்தில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி
மற்றும் மேல்நிலைப் பள்ளி கட்ட
40 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தவர்.
இன்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும்
அதன் வளாகத்திற்குள்
BEO அலுவலகமும், BDO அலுவகமும் இயங்கி வருகிறது.
தற்போது அவர் பெயரே அங்கு இல்லை
40 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்தமையைப் பாராட்டி திமுக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 31.08.2024 அன்று
பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் வைத்து
மாணா கோணா அவர்களின் பேரன் டாக்டர் பெருமாள்சாமி அவர்களிடம் "நன்கொடையாளர்" விருதினை வழங்கி உள்ளார்.
40 ஏக்கர் இடத்தை கொடுத்த இடத்தில் பாராட்டு வைக்காமல் ஜான்ஸ் கல்லூரி இடத்தில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மானா கோனா அவர்கள் தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மற்றும் குமரி மாவட்டங்கள் அடங்கிய பகுதிகளின் திருநெல்வேலி ஜில்லா
1938 முதல்1941 முடிய
காங்கிரஸ் தலைவராகவும் இராமநாதபுரம் ஜில்லா காங்கிரஸ் உறுப்பினராகவும் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளிலும் இருந்தார்.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் குமாரசாமி ராஜா போன்றோர் சென்னை மாகாண பிரிமியராக
வர பாடுபட்ட தலைவர்களுள் மானாகோனாவும் ஒரு தவிர்க்க இயலாத முக்கிய காங்கிரஸ் தலைவர் ஆவார்.
இராமநாதபுரம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த சேர்வை அவர்கள் இராமநாதபுரம் ஜில்லா காங்கிரஸ் தலைவராக அப்போது இருந்தார்.
மானாகோனா எனும் மடத்துப்பட்டி கோபால் நாயுடு அவர்கள்
ஜில்லா போர்டு தலைவராக இருக்கும் போது ஸ்ரீவைகுண்டம் பாலத்தைக் கட்டி 15.03.1941 ஆண்டில் மக்களின் பயன்பாட்டிற்காக
திறந்து வைத்து உள்ளார். இன்றும் அந்த பாலத்தின் கல்வெட்டில் இவரது பெயர் உள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இவர் பல உதவிகளை செய்து உள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரிடம் உதவி பெற்று அரசியலில் முதல் படியை தாண்டிய காமராஜர்
அரசியலுக்கு நுழைந்து காங்கிரஸில் சேர உதவியர்தான் மானாகோனா எனும் மடத்துப்பட்டி கோபால்.
அதுவரை காமராஜருக்கு நாடார் கேரக்டர் கிடையாது. நாடார் கேரக்டராக இருந்தால் முத்துராமலிங்கத் தேவரே கீமராஜருக்கு உதவி இருக்க மாட்டார் என்பதை நினைவில் கொள்க.
நாயக்கர் ஏரியாவில், தேவர் ஏரியாவில் காமாட்சி கேரக்டரில் வாழ்ந்தவர் தான் காமராஜர்.
அப்படிண்ணேன்
இப்படிட்ண்ணேன் என்று அவர்களின் பேச்சு வழக்கில் வாழத் தொடங்கினார் காமாட்சியாக வாழ்ந்த காமராஜர்.
1935 ஆம்.ஆண்டு காந்தியடிகள்
தென் தமிழகத்திற்கு வரும் பொழுது
மாணா கோணா தலைமையில் கோவில்பட்டியில் வைத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சிறு வயதாக காமாட்சி கேரக்டரில் காமராஜர் இருக்கும் பொழுதே இவரை காங்கிரஸில் புகழ் பெற வைக்க
உறுதுணையாக இருந்தவர்களுள் முக்கியமானவர் தான்
மட்த்துப்பட்டி கோபால் சாமி நாயக்கர்.
காமராஜர் மடத்துப்பட்டி கோபால் சாமி நாயக்கர் அவர்களை
"அய்யா" என்ற வார்த்தைக்கு மேல் பேசாமல் மதிப்புடன் அழைப்பார்.
கோபால் சாமி நாயக்கர் சுதந்திரம் பெற மிகுந்த பாடுபட்டார்.
ஆனால் சுதந்திர போராட்ட தியாகி அல்ல.
சிறை சென்றவர்களுக்கும்
அவர்களின் குடும்பத்தார்களுக்கும்
வேண்டிய உதவிகளை செய்ய வேண்டியிருப்பதால்
இவர் சிறைக்கு சென்றால் பல வேலைகள் கெட்டு விடும் என்பதற்காக சிறைக்கு சென்றவர் அல்ல.
காமராஜர் உங்களுக்காக நான் போகிறேன் என்று கேட்டு கொண்டதால் சிறைக்கு காமராஜரை தனக்காக அனுப்பியவர் மானாகோனா போபால் சாமி நாயக்கர்.
உண்மையில் காமாட்சி காமராஜர் மானா கோனா சொன்ன போராட்டங்களை செய்தவரே தவிர சுதந்திர போராட்டத் தியாகி காமராஜர் கிடையாது.
சுதந்திரப்போராட்ட
காலத்தில் பல ஊர்களில் கோபால் சாமி நாயக்கர் தலைமையில் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.
காமராஜர்,கக்கன், ரா.கிருஷ்ணசாமி,தேனிதியாகராஜன், எஸ்.ஆர்.நாயுடு போன்ற
அனைவருக்கும் சீனியர்தான் மானாகோனா கோபால் நாயக்கர்.
1935 ஆம் ஆண்டு முதல்
காமராஜர் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராக வர
மிகவும் பாடுபட்டவர் தான் செல்வாக்கு மிக்க
பண்ணையார் தான்
மடத்துப்பட்டி
கோபால் நாயக்கர்.
ம.கோ போலவே வை.கோ பெயர் போட்டதால் வைகோவிற்கு இவர் என்ன உறவு என்று பலருக்கு குழப்பம் நிலவுகிறது.
மடத்துப்பட்டி
கோபால் நாயக்கர் வேறு, திண்டுக்கல்
பாளையக்காரர் விருப்பாச்சி கோபால் நாயுடு வேறு.
மடத்துப்பட்டி கோபால் நாயுடுவின்
இரண்டாவது மகன், ம.தி.மு.க.பொதுச் செயலர்,வைகோவின்
இரண்டாவது அக்காவை திருமணம் செய்தவர்.
இரண்டு குடும்பமும் பரம்பரையாக காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
வைகோ விற்கு மானா கோனா அவர்கள் தாத்தாவும் இல்லை, மானா கோனா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அவர்களுக்கு, வைகோ பேரனும் இல்லை.
ஆந்திரா மற்றும் தமிழகம் ஒன்றுபட்ட சென்னை இராஜ தானியாக இருந்த போது சஞ்சீவிரெட்டி போன்ற ஆந்திர காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் டெல்லி அரசியலில் ஒரு சில தலைவர்கள் மத்தியில் மானா கோனா அவர்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அந்த செல்வாக்கை தனக்குப் பயன்படுத்த, அவர்களிடத்தில் வைகோ "நான் மானா கோனாவின் பேரன்" என்று பொய் சொல்லி தன்னை வளர்த்துக் கொண்டார்.
மானா கோனாவிற்கு மூன்று புதல்வர்கள். நடுவில் உள்ள புதல்வரின் பெயரும் கோபால்சாமி. அந்த மானா கோனாவின் புதல்வர் கோபால்சாமி அவர்கள் வைகோவிற்கு மூன்று மூத்த சகோதரிகள் நடுவில் உள்ள சகோதரியை திருமணம் செய்த வகையில், மானா கோனா அவர்கள் மகனுக்கு வைகோ மைத்துனர் ஆவார்.
சரி காமாட்சியின் நாயுடு வட்டார கேரக்டரின் கிளைமாக்ஸ்க்கு வருவோம்.
காமாட்சி காமராஜர் என்பது மானோகோனா அவர்களின் நாயக்க சிஷ்யராகவே ஆனார்.
குல தெய்வ பலி பூஜைக்கு தடை விதித்த குமாரசாமி ராஜா முதல்வராக இருந்த போது கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு இரயிலில் மானா கோனா முதல் வகுப்பு பெட்டியிலும் காமராஜர் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியிலும் பயணம் செய்தனர்.
அப்போது செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் காமராஜர் மானா கோனா அவர்களுக்கு கடைசியாக டீ வாங்கி கொடுத்து உள்ளார்.
அமைதியான சத்தியராஜ் பாணியில் வாழ்ந்த காமராஜர் சென்னை எழும்பூர் எக்மோர் ஸ்டேஷன் சென்று மானா கோனாவை தேடிய போது, மானா கோனா அவர்கள் கழிப்பறையில் இறந்து கிடந்தார்.
அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து வந்து நடந்த இறுதி சடங்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெறும் தலைவர்களும் அன்றைய முதல்வர் குமாரசாமி ராஜா அவர்களும் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு நாடார் கெட்டப்பில் வந்த காமராஜர் 1952 ஆண்டு தேர்தலில் வில்லாதி வில்லன் படத்தில் நாகராஜ சோழன் கேரக்டரில் ஆமாண்ணேன், சொன்னேன்ணேன் என்று ன வுக்கு பதிலாக ண போட்டு தெலுங்கு லாபியில் பேசி
வளர்வது போல வளர்ந்தார்.
சரி காமராஜர் எப்படி இப்படி செய்வார் என்று நீங்கள் நினைத்தால், தன்னை வளர்த்த மானாகோனாவை பற்றி எங்காவது பேசி அவரை புகழ்ந்து உள்ளாரா? மானாகோனா பெயரில் எதையாவது திறந்தாரா?
அரசியல் வரலாற்றில் இருந்து மானாகோனாவை அழித்து ஒழித்தாரா?
என்று நீங்களே கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள்.
சரிங்க...இதே ரயில் பயணத்தில் அதே மாடலில் திமுக என்ன செய்தது என்று சொன்னீர்களே❗
அது என்ன பாணி என்று நீங்கள் கேட்பதும் என் காதில் கேட்கிறது.
பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் 1996 ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.பின் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்.
2001 ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அதன்பிறகு 2006 ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அப்போது ஸ்டாலின் டம்மியாகவும் அழகிரி வீரனாகவும் காட்டப்பட்ட நேரம்.
பிடிஆருக்கும் அழகிரிக்கும் அப்போது ஏழாம் பொருத்தம்.
அப்போது அஞ்சாநெஞ்சனாக காட்டப்பட்ட அழகிரி அப்பா கருணாநிதியிடம் பிடிஆரை எப்படி நீங்கள் மந்தியாக அதுவும் அறநிலையத் துறை மந்திரியாக என்று கோபப் பட்டார்.
கருணாநிதி உன் ஊர் சென்னையில் இருந்து மதுரைதானே வர வேண்டும் என்று கூறி விடவே மதுரை சேரும் வழியிலேயே மரணம்.
ஆஸ்பத்திரி பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் சான்றிதழை கொடுத்தது.
ரயில் மரணம் என்பது மானோகானா, காமாட்சி காமராஜர் காலத்தில் நடந்தது தான் தமிழக அரசியலின் முதல் தொடக்கம்.
காமராஜர் மேல் எனக்கு கோபம் கிடையாது.
உண்மை ஒருபோதும் தூங்காது.
உண்மை தூங்கினால் அதை எழுப்பி விட்டே ஆக வேண்டும்.
துரோகிக்கு என்றுமே மன்னிப்பு கிடையாது என்பதே நமது தமிழ் வரலாறு,இதிகாசங்கள் நமக்கு சொல்லித் தந்தது.
நாடார் மகா ஜன சங்கம், தட்சிண மாற நாடார் சங்கம் என்பது என்று விசுவாசம் இல்லாத காமராஜர் படத்தை போட்டுக் கொண்டதோ, அன்றே அதன் வலிமையை இழந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சேர சோழ பாண்டியனார்கள் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதையும், நாயன்மார்களில் சிலர் நாடன் என்பதை பலர் சொல்லியதையும் தேடாமல் காமாட்சி காமராஜரை நாடன் வரலாறாக எண்ணி நீங்கள் சிலிர்த்தால் அது கண்டிப்பாக அவரைப் போல சிற்றின்ப வாழ்வாக மட்டுமே அமையும்.
பேரின்பமாக அமையாது.
தற்போதைய நாடார் சங்க பெருச்சாளிகள் உள்பட அனைவரும் உங்களை காமாட்சி காமராஜர் பெயரை சொல்லியே ஏமாற்றுகின்றனர்.
https://www.facebook.com/share/p/17prrqA9wF/
சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டி தெலுங்கு நாயக்கர்கள் வாழும் ஊர்.
ராமநாதபுரம் மாவட்ட நிரந்தர வறட்சிக்கு காரணம் காமாட்சி காமராஜர் கட்டிய வைகை அணைக்கட்டே காரணம்!
மணிமுத்தாறு அணை கட்டி உடன்குடி குலசேகரன்பட்டினம் பகுதிகளை வறட்சி பகுதியாக்கி மக்களை வெளியேற்றி அதனால் இன்று பல அழிவு திட்டங்கள் வர அன்றே விதைபோட்ட புண்ணியவான்.
ஏநாதி நாத நாயனார் வாழ்க்கையை படிங்க என் மக்கா.
https://www.facebook.com/share/p/1XDBiUUr3n/
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
பகிர்வோம்.........
0 கருத்துகள்