2009ல் மெக்சிகோவில் இளம்பெண் ஒருவர் பணக்கார விடுதியில் இருந்து வெளியே ஓடி வந்து பயத்துடன் 'அவர்கள் மனிதக்கறியை சாப்பிடுகின்றனர்' என்றார். அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அதனை படம்பிடித்தனர். பின்னாட்களில் அந்த சிறுமி காணாமல் போய்விட்டார் அதன்பின் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இப்போது எஃப்ஸ்டெயின் கோப்புகளில் சிலர் மனிதக்கறியை சாப்பிட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா மையத்தில் இருந்து இரவு நேரத்தில் ஒரு சிறுமி யோகா உடையுடன் தப்பி ஓடுகிறார். சில நேரத்துக்கு பிறகு, அதே வழியில் ஒரு வேன் அவரை பின்தொடர்ந்து செல்கிறது. அங்கிருந்த சிசிடிவியில் இது பதிவாகியுள்ளது. சில நாட்களுக்கு பின் அந்த பெண் சடலமாக கிணற்றில் காணப்படுகிறார். அமைதி, கடவுள் என்ற பெயரில் நடத்தப்படும் இடத்தில் சிறுமி இப்படி ஏன் ஓடி வரவேண்டும்? பின்னாட்களில் அவர் ஏன் பிணமாக கண்டெடுக்கப்பட வேண்டும்?
இயற்கையை காப்போம் என்ற பெயரில் யானைகளை கொன்று, காடுகளை அழித்து வளைத்து போட்டு, மதம் என்ற பெயரில் வியாபாரம் நடத்தி வரும் ஈஷா மையத்தில் இது போன்ற பல வன்கொடுமைகள் நடக்கிறதாம். கடவுள், மோட்சம் என்ற பெயரில் சிறார்களை அழைத்து, பெற்றோர்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் தொடர்பை துண்டித்து விட்டு முழுக்க முழுக்க அவர்களை மூளைச்சலவை செய்து வருகின்றது ஈஷா மையம்.
யோகா செய்யவேண்டுமென்றாலே அரை நிர்வாண உடையில் தான் செய்ய வேண்டுமாம். மொட்டையும் அடித்து விடவேண்டுமாம். அது போக, சமீபத்தில் அங்கு தகன மேடை இருப்பதும் தெரியவந்தது. எவ்வித தொலைதெடர்பு சாதனங்களும் அனுமதி இல்லை, உள்ளே சிறார்களை வைத்து நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையை நிகழ்த்தியும் வருகின்றனர். தகன மேடையில் எத்தனை பேர் எரிக்கப்பட்டிருப்பார்கள், ஏன் எரிக்கப்பட்டிருப்பார்கள், எத்தனை வன்முறை அரங்கேறியிருக்கிறது என்று எதுவும் இது வரை தெரியவில்லை. ஜக்கி மீது ஏற்கெனவே அவரது மனைவியை கொன்ற வழக்கும் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஷா பற்றி ஆராய்ந்தால் திடுக்கிடும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கும் இடத்திற்கு, பிரதமர், குடியரசு தலைவர், அரசியல்வாதிகள் தொடங்கி திரை பிரபலங்கள் வரை அங்கு சென்று ஆடிப்பாடி வருகின்றனர். இது பற்றி பெரிதாக ஊடகங்களும் பேசவில்லை. நக்கீரன் கோபால் இது பற்றி இரண்டு வீடியோக்களை சில ஆண்டுகளுக்கு தக்க தரவுகளோடு முன்பே வெளியிட்டுள்ளார். ஈஷா ஃபைல்ஸ் என்று ஒன்று வெளிவந்தால் அன்று பல உண்மைகள் வெளிவரும்.
பணம், அதிகாரம், மதம் இம்மூன்றும் சேர்ந்தால் அங்கு எண்ணிலடங்கா மனித உரிமை மீறல்களும் சொல்லிலடங்கா வன்கொடுமைகளும் நிகழ்த்தப்படும்
மிகவும் மிடுக்காக, சுத்தமானவர்களாக, நாகரிக மனிதர்களாக, பக்திமான்களாக தங்களை வெளி உலக்கத்திற்கு காட்டிக்கொள்பவர்கள் தான் திரைமறைவில் சொல்லிலடங்கா வக்கிரங்களை செய்துவருகின்றனர்
0 கருத்துகள்