திருச்சியில் கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் 43 வயதான திருவெறும்பூர் பெல் நிறுவன அதிகாரி மஞ்சித் சிங் தற்கொலை செய்துகொண்டார்.
நஷ்டத்தால் மன உளைச்சலிலிருந்த சிங் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் பணிக்கு சென்ற சிங் 4வது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். உ.பி. லக்னோவை சேர்ந்த சிங் 2023ல் பணி மாறுதல் பெற்று திருச்சி வந்தார்.
0 கருத்துகள்