திருப்பூரில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது சண்முகம் என்ற முதியவர் போக்சோவில் கைதானார்.
சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்திவரும் சிறுமியின் தாயாருக்கு உதவி செய்வதுபோல சண்முகம் சில நாட்களாக நடித்து வந்துள்ளார். தாய் கடையில் இல்லாத நேரத்தில், முதியவர் அத்துமீறியதாக சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 கருத்துகள்