சென்னையில் புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை; சவரன் ₹60,200க்கு விற்பனை


சென்னையில் புதன்கிழமையன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ₹60,200 என்ற வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஒரு சவரன் தங்கம் விலை ₹60,000 கடந்து விற்பனையாவது இதுவே முதல்முறையாகும். கிராமுக்கு ₹75 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ₹7,525க்கு விற்பனையாகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற மறு நாளில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்