முற்றுகை போராட்டம் அறிவிப்பு எதிரொலி; சென்னையில் சீமான் வீட்டின் முன்பு குவிந்த நாதகவினர்


பெரியாரை இழிவுப்படுத்தியதாக கூறி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு புதன்கிழமை முற்றுகையிடப்படுமென பெரியார் கூட்டமைப்பு, மே 17 இயக்கத்தினர் அறிவித்த நிலையில், நீலாங்கரையிலுள்ள அவரது வீட்டின் முன்பு நாதகவினர் குவிந்துள்ளனர்.

தொடர்ந்து சீமான் இல்லத்தை நோக்கி செல்லும் நாதகவினருக்கு போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்புக்காக சீமான் வீட்டின் முன்பு 220 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்