கரூரில் ஆம்னி வேனில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி மீட்பு, 3 பேர் கைது


கரூரில் திங்களன்று ஆம்னி வேனில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி மீட்கப்பட்ட நிலையில், மாணவியை கடத்தியதாக இளைஞர்கள் 3 பேர் கைதாகினர். பிஏ 3ம் ஆண்டு படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை கடத்தியதாக புகாரளிக்கப்பட்டது. இதுதொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், திண்டுக்கல் குஜிலியம்பாறையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து மாணவியை போலீசார் மீட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்