புதுக்கோட்டை வேங்கைவயலுக்கு சென்று விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருப்பதாக தகவல்


தவெக தலைவர் விஜய், புதுக்கோட்டை வேங்கைவயலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், விஜய் மக்களை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் பொதுமக்களை சந்தித்து விஜய் தனது ஆதரவை தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்