நெல்லை மேலப்பாளையத்தில் ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி ரியாஸ் என்ற 5 வயது சிறுவன் உயிரிழந்தார். புதன்கிழமை தனது தாத்தா-பாட்டி வாங்கிக்கொடுத்த பழத்தை ரியாஸ் விழுங்கியபோது, அதன் விதை தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனால் மூச்சுத்திணறி துடிதுடித்த சிறுவன், அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் வழியிலேயே இறந்தார். ரியாஸ் தனது தாயுடன் தாத்தா-பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
0 கருத்துகள்