சென்னையில் உள்ள புனித தோமையார் மலை தேவாலயத்தை உலகப்புகழ் பெற்ற தேவாலயமாக போப் ஆண்டவரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா இன்று வியாழனன்று மாலை ஆலயத்தில் நடைபெறவுள்ளது. இதில் வாடிகனுக்கான இந்திய தூதர் லியோபோல்டோ கிரெல்லி, ஐதராபாத் பேராயர் அந்தோணி கார்டினல் பூலா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இயேசுவின் சீடரான தோமா கிபி 72ம் ஆண்டு தோமையார் மலையில் உயிர் நீத்ததாக மரபு வழி செய்தி இருக்கிறது.
0 கருத்துகள்