நாட்டில் இயல்பைவிட அதிக மழை தரப்போகும் ஜூலை மாதம்: வானிலை ஆய்வு மையம் தகவல்


நாட்டில் ஜூலை மாதம் வழக்கத்தை விட 6% மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது. பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் தற்போது நடுநிலை எல் நினோ-தெற்கு அலைவு நிலைமைகள் நிலவுவதாகவும், பருவமழை முடியும் வரை இது நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்