சென்னை, தாம்பரத்தில் கல்லூரி மாணவிக்கு பிறந்த பெண் குழந்தையை தொப்புள் கொடியுடன் குப்பையில் வீசி சென்ற சம்பவம் நடந்துள்ளது. குழந்தையை மீட்ட போலீசார், CCTV-யை ஆய்வு செய்ததில் மாணவி குழந்தையை வீசி சென்றது தெரிந்தது. விசாரணையில் கல்லூரி மாணவி, கர்ப்பமான நிலையில் அவரது தாய் வீட்டிலேயே பிரசவம் பார்த்தது தெரியவந்தது. மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார் சிசுவை தாயிடம் ஒப்படைத்தனர்.
0 கருத்துகள்