மே.வங்கத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரயிலில் கடத்த முயன்ற 56 இளம்பெண்கள் மீட்பு, 2 பேர் கைது


மே.வங்கம், நியூ ஜல்பைகுரியிலிருந்து பாட்னா புறப்பட்ட ரயிலில் கடத்த முயன்ற 18-31 வயதுடைய 56 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களின் கைகளில் முத்திரை எண்கள் இருந்தது. ஒரு பெட்டியில் இளம்பெண்கள் அதிகளவில் இருந்ததால் ரயில்வே போலீசார் விசாரித்தபோது, இவர்கள் பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பாட்னா ரயிலில் அழைத்து சென்றது தெரியவந்தது. இவர்களை அழைத்து செல்ல முயன்ற இருவர் கைதாகினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்