குஜராத்தின், ஜான்க் கிராமத்திலுள்ள ஒரு பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்களை தாக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர்கள் அனைவரும் காந்தி நகரிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. முடிவில், 122 மாணவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்துள்ள நிலையில், 2 மாணவர்களுக்கு மட்டும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
0 கருத்துகள்