சிவகங்கையில் போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்ததன் எதிரொலியாக தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குற்றச்சம்பவங்கள் நடைபெறும்போது வழக்கின் தன்மைக்கு ஏற்ப தனிப்படைகளை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும், தனிப்படைகளை வைத்து கொண்டு விசாரணை நடத்த கூடாது என ஐ.ஜிக்கள் மூலம் வாய் மொழி உத்தரவாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
0 கருத்துகள்