போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த 28 வயது பிரபல கால்பந்து வீரரான தியாகோ ஜோட்டா ஸ்பெயினில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். விபத்தில் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் பலியானார். ஜோட்டாவும் அவரது சகோதரரும் தங்களது காரில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையிலிருந்து விலகி தீப்பிடித்து எரிந்தது. போர்ச்சுக்கல் அணி 2019 & 2025 இரண்டிலும் நேஷன்ஸ் லீக் கோப்பையை வெல்வதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
0 கருத்துகள்