திருவள்ளூர், பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் 24 வயது லோகேஷ்வரி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அவரது 37 வயது கணவர் பன்னீர், மாமியார் பூங்கோதை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாமனார், நாத்தனாரை தேடி வருகின்றனர்.
வரதட்சனை கேட்டு லோகேஷ்வரியை கொடுமைப்படுத்தியதாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்