பிரிந்து வாழும் மனைவி & மகளுக்கு மாதந்தோறும் ₹4 லட்சம் பராமரிப்பு தொகை வழங்க ஷமிக்கு ஐகோர்ட் உத்தரவு


கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது பிரிந்த மனைவி ஹசின் ஜஹான் & அவர்களது மகளுக்கு மாதந்தோறும் ₹4 லட்சம் வழங்க கொல்கத்தா ஐகோர்ட் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 2023ல் மாவட்ட நீதிமன்றம் ஷமி தனக்கு ₹50,000 மற்றும் தங்கள் மகளுக்கு ₹80,000 வழங்க உத்தரவிட்டதை அடுத்து ஜஹான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தனக்கும் தங்களது மகளுக்கும் மாதந்தோறும் ₹10 லட்சம் பராமரிப்பு வழங்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்