கேரள, கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 52 வயது உயிரிழந்தார். மேலும், 2 பேர் காயமடைந்தனர். 14வது வார்டு அருகே அமைந்துள்ள கழிப்பறை கட்டடம் இடிந்து விழுந்ததில் அப்பெண் சிக்கினார். இதனிடையே, மீட்பு நடவடிக்கையில் கால தாமதம் ஏற்பட்டதாகவும், இரண்டரை மணிநேரத்துக்கு பிறகே பிந்துவின் உடல் மீட்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
0 கருத்துகள்