புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை எதிர்த்து போராடியதால் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜகபர் அலியை கொலை செய்ததாக குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ், மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், ஓட்டுநர் காசி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். டூவீலரில் சென்ற ஜகபர் அலி, லாரி மோதி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாரளித்தனர்.
0 கருத்துகள்