2024ல் ரயில் டிக்கெட் முன்பதிவு முறைகேட்டில் ஈடுபட்ட 4,975 பேர் கைது


நாடு முழுவதும் 2024ல் ரயில் டிக்கெட் முன்பதிவு முறைகேட்டில் ஈடுபட்ட 4,725 வழக்குகளில் 4,975 போலி முகவர்கள் கைதானதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ₹53 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 1,24,529 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதவிர, தட்கல் & பல்க் புக்கிங் முறைகேடுகளில் ஈடுபட்ட 26,442 ஐஆர்சிடிசி கணக்குள் முடக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்