ஜனவரி 23ம் தேதி வரை தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?


தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜன.23ம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல் & கன்னியாகுமரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோர பகுதி, குமரிக்கடல் & அதையொட்டிய மன்னார் வளைகுடாவில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்