41 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து மோசமான சாதனை படைத்த இந்தியா


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 430/3 ரன்களிலிருந்து இந்தியா அடுத்த 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. அணியில் 3 பேர் (ஜெய்ஸ்வால், கில், பந்த்) சதமடித்தும் குறைந்த ஸ்கோருக்கு ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்தது. 2016ல் இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 475 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்