ராஜஸ்தான், சித்தோர்கரில் உள்ள புகழ்பெற்ற சன்வாலியா சேத் கோவிலுக்கு பக்தர் ஒருவர் வெள்ளியால் ஆன 'பெட்ரோல் பம்ப்' ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அக்கோவிலில் தான் வேண்டுதல் வைத்ததாகவும், வேண்டுதல் நிறைவேறியதால், கோயிலுக்கு காணிக்கை அளித்ததாகவும் பக்தர் கூறினார். இந்த பெட்ரோல் பம்ப் 10 கிலோ வெள்ளியால் ஆனது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்