கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து, 3 பேர் உயிரிழப்பு என தகவல்


கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேன் ஓட்டுநர், வாகனத்தில் பயணித்த மாணவர்கள் என 10க்கும் மேற்பட்டோர் இவ்விபத்தில் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. செவ்வாயன்று ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததாகவும், அப்போது வேன், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்