TOI-ன் அறிக்கையின்படி, 2024 நிலவரப்படி நடிகரும் தவெக தலைவருமான விஜயின் சொத்து மதிப்பு சுமார் ₹600 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஒரு படத்திற்கு ₹200-₹270 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. சென்னை நீலாங்கரையில் ஆடம்பரமான பீச் ஹவுஸ் வைத்துள்ள அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், BMW X5, X6, ஆடி A8 L, மெர்சிடிஸ் பென்ஸ் GLA உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை அவரது 51வது பிறந்தநாளாகும்.
0 கருத்துகள்