நாகர்கோவில் டவுன் நிலையம் அருகே ஓடும் ரயில் மீது சிலர் கல் வீசியதால், ரயிலில் பயணம் செய்த 12 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக 2 பள்ளி மாணவர்கள் உட்பட 4 சிறுவர்களை போலீசார் பிடித்தனர். குமரியிலிருந்து கொல்லத்திற்கு ரயில் செல்லும் போது, ரயில் தண்டவாளத்திற்கு அருகே நின்றிருந்த அவர்கள் கற்களை வீசியுள்ளனர்.
படுகாயமடைந்த சிறுமி திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.
0 கருத்துகள்