இந்திய வம்சாவளியான வைபவ் தனேஜா, எலான் மஸ்க்கின் 'அமெரிக்கா கட்சியின்' பொருளாளராக நியமனம்


இந்திய வம்சாவளியை சேர்ந்த டெஸ்லா தலைமை நிதி அதிகாரி வைபவ் தனேஜா, எலான் மஸ்க்கின் புதிய அரசியல் கட்சியான 'அமெரிக்க கட்சியின்' பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய தேர்தல் ஆணையம் (FEC) தெரிவித்துள்ளது. 2023 முதல் டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரியாக தனேஜா இருந்து வருகிறார். அமெரிக்க அதிபர் டிரம்பின் 'பிக் பியூட்டிஃபுல் பில்' தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு பிறகு மஸ்க் கட்சியை அறிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்