சென்னையில் மகளை ஆபாச வீடியோ எடுத்து விற்ற பெற்றோர், மேலும் 6 சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அம்பலம்
சென்னையில் பணத்திற்காக பெற்ற மகளையே பாலியில் தொழிலுக்கு அனுப்பி, அதனை வீடியோ எடுத்து பெற்றோரே விற்பனை செய்த விவகாரத்தில், மகளின் பள்ளி தோழிகள் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் இருந்த வீடியோக்களில் 6 சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டறிந்தனர். இதனிடையே இந்த வீடியோக்களை பதிவிறக்கம் செய்ததாக 2 இளைஞர்கள் கைதாகியுள்ளனர்.
0 கருத்துகள்