'மகாராஜா' படத்தால் நடிகர் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குநரிடம் இருந்து அழைப்பு வந்தது: நித்திலன் சுவாமிநாதன்


'மகாராஜா' படம் பார்த்த ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் அலெஜாண்ட்ரோ அவரது படத்தில் நடிக்க நடிகர் அனுராக் காஷ்யப்பை அழைத்ததாக இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் கூறியுள்ளார். "சமீபத்தில் அனுராக்கை சந்தித்தபோது, இதுபற்றி கூறிய அவர், இதற்கு 'மகாராஜா' படம்தான் காரணம் என்றார். இதை கேட்டு எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். விஜய் சேதுபதி நடிப்பில் கடந்தாண்டு 'மகாராஜா' வெளியானது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்