இந்து முன்னணி சார்பில் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா, பெரியாரை விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அதிமுக, இதை துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றது. மாநாடு முடிந்த பின் இதுபற்றிய செய்திகள் மூலம் அறிந்து கொண்டதாகவும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதிமுக ஏற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், அதிமுக விளக்கமளித்துள்ளது.
0 கருத்துகள்