டெல்லியின் புதிய முதல்வரான ரேகா குப்தா யார்?


ஷாலிமார் பாக் தொகுதியில் முதல்முறையாக MLAவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தாவை டெல்லியின் அடுத்த முதல்வராக பாஜக தேர்வு செய்துள்ளது. டெல்லி பாஜக மகிளா மோர்ச்சா பொதுச்செயலாளராக பணியாற்றிய 50 வயதான இவர், தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர். தனது அரசியல் பயணத்தை ABVPயில் தொடங்கிய ரேகா, டெல்லி பல்கலை. மாணவர் சங்க தலைவரானார். உத்தரி பிடம்புரா கவுன்சிலராகவும், தெற்கு டெல்லி மாநகராட்சி மேயராகவும் பணியாற்றினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்