அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை "சர்வாதிகாரி" என அழைத்தார். "தேர்தல் இல்லாத சர்வாதிகாரியான ஜெலென்ஸ்கி, வேகமாக நகர்வது நல்லது, இல்லையெனில் அவருக்கு ஒரு நாடு இருக்காது" என Xல் குறிப்பிட்டார். ஜெலென்ஸ்கி அதிபர் பதவிக்காலம் கடந்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடையவிருந்தது, ஆனால் நடந்துகொண்டிருக்கும் போர் காரணமாக அதிபர் தேர்தலை நடத்த முடியவில்லை.
0 கருத்துகள்