சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படம் ₹100 கோடி வசூலித்ததாக படக்குழு புதனன்று அறிவித்துள்ளது. கடந்த 20ம் தேதி வெளியான இப்படம் 5 நாட்களில் இந்த வசூல் சாதனை செய்துள்ளது. இதன்மூலம் சேகர் கம்முலா முதல்முறையாக ₹100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் நுழைந்துள்ளார். இப்படத்திற்கு தெலுங்கு மாநிலங்களில் வரவேற்பு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதில் நாகர்ஜூனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
0 கருத்துகள்