திமுக கூட்டணி உடையும் எனவும், அக்கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறவுள்ளன எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், "தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளன. இதுகுறித்து பாஜக தேசிய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்.
2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதற்கு அதிமுக தலைமை வகிக்கும் என பாஜக தேசிய தலைவர்கள் ஏற்கனவே கூறிவிட்டனர்" என்றார்.
0 கருத்துகள்