சென்னை விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வந்த மிரட்டலை அடுத்து, விமான நிலைய வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என விசாரிக்கின்றனர்.
0 கருத்துகள்