மகளிர் உரிமைத்தொகை பெற கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு


மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக மேலும் 3 தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம். அரசுத்துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் குடும்பங்களை சேர்ந்த பெண்களும் தகுதியானவர்கள். விதவை ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்