புலவாயோவில் நடக்கும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்டில் அறிமுகமான தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் அறிமுக போட்டியில் அதிவேக அரைசதம் விளாசிய தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்தார். 22 வயதான அவர் 41 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 51 ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 418 ரன்கள் குவித்தது.
0 கருத்துகள்