கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகர பல்கலைக்கழகத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரை சூட்ட அம்மாநில அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. டிசம்பர் 26, 2024 அன்று காலமான மன்மோகன் சிங்கின் பெயரில் சூட்டப்பட்ட இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் இதுவாகும்.
பெங்களூரு நகருக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தும் விதமாக பல்கலை.க்கு அவரது பெயர் சூட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
0 கருத்துகள்