டெல்லியில் 36 வயது கரண்தேவ் என்பவரை கொன்ற வழக்கில், அவரது மனைவி சுஷ்மிதா & உறவினர் ராகுல் கைதாகினர். தகாத உறவிலிருந்த இருவரும் கரணை கொல்ல, உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தனர். அவர் உயிர் பிரியாததால், உடலில் மின்சாரம் பாய்ச்சி கொன்றனர். மின்சாரம் தாக்கி இறந்ததாக நாடகமாடிய சுஷ்மிதாவை சந்தேகித்த கரணின் சகோதரர், செல்போனை ஆராய்ந்ததில் சுஷ்மிதா கரணை கொல்ல ராகுலுடன் இன்ஸ்டாவில் பேசியது தெரிந்தது.
0 கருத்துகள்