அமெரிக்காவின் வாஷிங்டனில் ஐதராபாத்தை சேர்ந்த 26 வயது இந்திய மாணவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இறந்த ரவி தேஜா தனது பட்ட மேற்படிப்புக்காக 2022ல் அமெரிக்கா சென்ற நிலையில், படிப்பை முடித்துவிட்டு அங்கு வேலை தேடி கொண்டிருந்தார். "என்னால் பேச முடியவில்லை..யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது. அமெரிக்காவிற்கு எப்படி சென்ற எனது மகன், தற்போது எப்படி திரும்பியிருக்கிறான்" என அவரது தந்தை கூறினார்.
0 கருத்துகள்