ரீல்ஸில் இனி 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்பு இது வெறும் 90 நொடிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சதுர வடிவிலான ப்ரொபைல் கிரிட் இப்போது செவ்வக (ரெக்டேங்குலர்) வடிவ மாற்றம் மற்றும் நண்பர்களுக்கு லைக் செய்த ரீல்ஸ்களை ஷோ செய்வது போன்ற அம்சங்கள் தற்போதைய அப்டேட்களாக வழங்கியுள்ளது.
0 கருத்துகள்