துருக்கியில் ரிசார்ட்டில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 பேர் உயிரிழப்பு, 51 பேர் காயம்


துருக்கியின் வடமேற்கு பகுதியிலுள்ள ரிசார்ட்டில் இருந்த ஓட்டல் ஒன்றில் செவ்வாயன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். மேலும், 51 பேர் காயமடைந்தனர். 12 மாடிகள் கொண்ட இந்த ஓட்டலில் உணவகத்தில் தீவிபத்து ஏற்பட்டு மளமளவென மற்ற பகுதிகளுக்கு பரவியுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஓட்டலிலிருந்த 230 பேரை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

தீவிபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்