இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கவுரவிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ₹7 நாணயத்தை வெளியிட இருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது. இதனை மறுத்த PIB-ன் உண்மை அறியும் பிரிவு, இது போலியான செய்தி என X-ல் தெரிவித்துள்ளது. மேலும், பொருளாதார விவகாரங்கள் துறை இதுபோன்ற எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் கூறியுள்ளது.
0 கருத்துகள்