போர் நிறுத்த ஒப்பந்தத்தில் முதல் கட்டமாக 737 பாலஸ்தீனியர்களை விடுவிக்கும் இஸ்ரேல்


காசா போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில் தற்போது இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 737 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என அந்நாட்டு நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஃபதாவின் அல்-அக்ஸா தியாகிகள் படைப்பிரிவின் முன்னாள் தளபதியும், 2021ல் இஸ்ரேலில் நடந்த சிறை உடைப்பில் முக்கிய நபருமான ஜகாரியா ஜுபேடியும் விடுவிக்கப்படுவார். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் ஆதரவுடன் எகிப்து & கத்தாரால் நடத்தப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்