UK-வின் கார்லிஸை சேர்ந்த 20 வயது ஜேம்ஸ் கிளர்க்சன் சமீபத்தில் £120 (₹12,676)க்கு வாங்கிய லாட்டரிக்கு £7.5 மில்லியன் (₹80 கோடி) பரிசு விழுந்துள்ளது. கேஸ் இன்ஜியனரான இவர், லாட்டரி வென்ற மறுநாளே தனது அன்றாட பணிக்கு சென்று வடிகால்களை சுத்தம் செய்துள்ளார். பரிசு தொகையை வைத்து பெற்றோரின் கடனை அடைப்பது என பல திட்டங்கள் வைத்துள்ளதாக கூறும் ஜேம்ஸ், தொடர்ந்து வேலைக்கு செல்வதை நிறுத்தப்போவதில்லை என்றார்.
0 கருத்துகள்