ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை உறுதி செய்த ரோகித் சர்மா


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக, வரவிருக்கும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உறுதி செய்துள்ளார்.

ஜனவரி 23ம் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை தொடரில், ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா களமிறங்குவார். ரோகித் கடைசியாக 2015ம் ஆண்டு ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்