சீதாலட்சுமி மீது வழக்கு பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக, 8 பேர் மீதும் BNS-171 பிரிவின் கீழ் ஈரோடு நகர காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். ஈரோடு கிழக்கு MLA-வாக இருந்த EVKS இளங்கோவன் மறைவையடுத்து, பிப்.5ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
0 கருத்துகள்